க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

க.பொ.த. உயர்தர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

www.doe.nev.s.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக இதனைப் பார்வையிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை இந்தப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தோற்றவுள்ளதுடன், பரீட்சை ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகி செப்ரெம்பர் மாதம் 1ஆம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor