மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிவந்தவர்கள் கைது!

ண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வந்த நான்கு இலங்கை அகதிகள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அகதிகளுடன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில், சட்டவிரோதமான முறையில் படகொன்று நிற்பதை அவதானித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து கடற்படையினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிவந்தமை தெரியவந்துள்ளது. இவ்வாறு வந்தவர்களுள் 11 மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தவர்களே இவ்வாறு, நாட்டுக்குள் சட்டவிரோதமாக திரும்பிவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, இரு வாரங்களுக்கு முன்னர் யாழ்.காங்கேசன்துறையில் வைத்து 14 இலங்கை அகதிகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor