பலாலி விமான நிலையத்திகு காணி சுவீகரிப்பு!! தெல்லிப்பளை பிரதேச செயலாளர் அறிவிப்பு!!

பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுவரொட்டி கட்டுவன் சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு சட்டத்தின் பிரிவு 38(A) யின் கீழ் 07.08.1987 ஆம் திகதி பிரிசுரிக்கப்பட்ட 465/14 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலுக்கு அமைவாக பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவிகரிக்கப்படவுள்ளது. என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் காணிகளை உடைய உரிமையாளர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலக காணிக்கிளையுடன் தொடர்பு கொண்டு அவர்களது விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

காணிகள் உள்ள கிராம அலுவலர் பிரிவுகள்
ஜே/240- தென்மயிலை மயிலிட்டி தெற்கு
ஜே/246- மயிலிட்டி தெற்கு
ஜே/256- பலாலி மேற்கு
ஜே/252- பலாலி தெற்கு
ஜே/242- குரும்பசிட்டி

இராணுவ கம்பி வேலிக்கு உட்பட்ட கட்டுவன்-மயிலிட்டி வீதி பகுதிகளில் உள் பகுதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படலாம். மீதிப் பகுதி விமான நிலைய விஸ்தரிப்புக்கு எடுக்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor