இன அழிப்பு நாளாக மே 18 பிரகடனம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதியை இன அழிப்பு நாளாகவும், தமிழ் தேசியத்தின் துக்க நாளாகவும் வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 122வது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்படி பிரகடனத்திற்கான பிரேரணையை முன்வைத்தார்.

குறித்த பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் வழிமொழிந்தார்.

அதனைத் தொடர்ந்து சபையின் சகல உறுப்பினர்களின் ஆதரவுடனும், மேற்படி பிரகடனம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Recommended For You

About the Author: Editor