இன்று நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலை அதிகரிப்பு!!

கனியவள கூட்டுத்தாபன எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த கூட்டுத்தாபனத்தில் நிலவும் நிதிநெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய…

92 பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபா, 95 பெற்றோல் ஒரு லீட்டர் 148 ரூபா, டீசல் ஒரு லீட்டர் 109 ரூபா, சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 119 ரூபா, மண்ணெண்னைய் ஒரு லீட்டர் 101 ரூபா

இதேவேளை குறைந்த செலவில் மின்னுற்பத்தி செய்வதற்கான யோசனைக்கு இன்னும் பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார சபை பொறியியலாளர்கள் மேற்கொண்டுவரும் வரையறைக்கு உட்பட்டு தொழில்புரியும் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இதன்காரணமாக, கொழும்பு துறைமுகத்தில் இயங்கும் 60 மெகாவோட் மின்னுற்பத்தி கட்டமைப்பின் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டிருப்பதாக, மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor