இலங்கையில் புகழ் பூத்த இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் காத்திருக்கும் ஆபத்து!

இலங்கையில் புகழ் பூத்த இராவணா எல்ல நீர்வீழ்ச்சியை காணவரும் சுற்றுலா பயணிகள், அங்கு குளிக்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பண்டாரவளையில் தற்போது நிலவும் அடை மழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.

இதனால் குறித்த நீர்வீழ்ச்சியில் ஆபத்தான நிலைமை காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். தற்போதைய காலநிலையை கருத்திற்கொண்டு யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor