யாழ். யுவதிகள் இருவர் விமான நிலையத்தில் கைது

சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு யுவதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் துணை இயக்குனருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.1 கிலோ தங்க ஆபரணங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார்.

குறித்த இருவரும் தமது கைப்பைகளுக்குள் 836 கிராம் மற்றும் 264 கிராம் என தனித்தனியாக கொண்டுவர முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் போது கழுத்தணிகள், வளையல்கள், காதணிகள் உட்பட பல நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor