மின்சார சபைக்குள் மோசடிகள் தாராளம் – கபே குற்றச்சாட்டு

இலங்கை மின்சார சபையில் பெருமளவு மோசடிகள் இடம்பெறுகின்றன என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“இலங்கை மின்சார சபைக்கு வரும் ஒவ்வொரு நிலக்கரி கப்பலுக்கும் 120 மில்லியன் ரூபா மோசடி செய்யப்படுகிறது. விநியோகிக்கப்படும் மின்சாரத்தில் ஒவ்வொரு அலகுக்கும் 14 ரூபா மோசடி செய்யப்படுகிறது.

மின்சாரத் துறையில் முதலீடு செய்ய முன்வந்த வெளிநாட்டு முன்னணி முதலீட்டாளர்களுக்கு மின்சார சபையின் உயர் மட்டத்திலுள்ள சிலர் அனுமதி வழங்கவில்லை. அவர்கள் மாபியா போன்றே செயற்படுகின்றனர்.

அரச அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் மோசடிகள் தொடர்பில் பொது அமைப்புகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசின் உயர்மட்டத்தினர் தட்டிக்கழித்துவிடுகின்றனர்” என்றும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor