புலம்பெயர் மக்களின் உதவியை பெற அரசாங்கம் விரும்பில்லை! – வடக்கு முதல்வர்

புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்று பார்வையிட்ட வடக்கு முதல்வர், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடன் இவ்விடயம் தொடர்பாக தான் கதைத்ததாகவும், அவரும் இதுகுறித்து புரிந்துகொண்டபோதிலும், அதனை செயற்படுத்த முடியாமைக்கு அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கலாமென விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இதேவேளை, வலி. வடக்கில் சிறியதொரு பகுதியிலேயே இராணுவம் நிலைகொண்டுள்ளதென சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன், எனினும் அவர்கள் மக்களின் விளைநிலங்கள், பயன்தரு மரங்கள் கொண்ட காணிகளை பிடித்து வைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார். காணிகளை இவ்வாறு தொடர்ந்தும் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருப்பது வேதனையான விடயம் என்றும், அவற்றை விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor