ஊவா வெல்லஸ்ஸ நுண்மதிப் பரீட்சை

கடந்த வருட உயர்தரப் பெறுபெறுகளின் அடிப்படையில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நுண்மதிப் பரீட்சைகள் எதிர்வரும் 12ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறியத் தந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அனுராதபுரம் கண்டி கொழும்பு மாத்தறை பதுளை ஆகிய ஆறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 21 பரீட்சை நிலையங்களில் இப் பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத மாணவர்கள் 0553561752 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக சிரேஸ்ட உதவிப் பதிவாளர் பரீட்சைகள் பிரிவை தொடர்பு கொள்ள முடியும் எனவும் பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor