பால்மாவின் விலையை அதிகரிக்க அனுமதி

இறக்குமதியாகும் பால்மாவின் 400 கிராம் பக்கற்றுன் விலையை 20 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அனுமதியளித்துள்ளது.

அத்துடன் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கற்றின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வணிக அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்தார்.

இதேவேளை, பால்மா வகைகளின் விலையை கிலோவுக்கு 100 ரூபாவால் அதிகரிக்குமாறு இறக்குமதி நிறுவனங்கள் கோரியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor