வருடத்தின் முதல் மூன்று மாத காலப்பகுதியில் 91 HIV நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளார்கள்!

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் 91 எச்.ஐ.வி நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக பாலியல் சார் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாலியல்சார் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் டிலானி ராஜபக்ஷ கூறுகையில்,

“கடந்த வருடம் இதே முதல் மூன்று மாத காலப்பகுதியில் இனங்கானப்பட்ட எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 74 ஆகும். எனினும் இவ்வருடம் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு இனங்காணப்பட்ட எச்.ஐ.வி நோயாளர்களில் 39 பேர் ஆண் ஓரின சேர்க்கையின் மூலம் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியவர்களாகக் காணப்படுகின்றனர்.

பொது மக்களுக்கு இவ்விடயம் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று நோய் தடுப்புப்பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வருடத்தில் தாயிடமிருந்து குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பரவிய சம்பங்கள் எவையும் பதிவாகவில்லை என்பது குறிப்படத்தக்கதாகும்.

அதனடிப்படையில் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுதல் குறைவடைந்துள்ள நாடு என்ற வகையில், உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து இவ்வருட இறுதியில் அதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கவுள்ளன.” என தெரிவித்துள்ளார் .

Recommended For You

About the Author: Editor