பால்மா இறக்குமதி இடைநிறுத்தம்

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளதால் அதன் இறக்குமதியை தற்போது இடைநிறுத்தியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் பால்மாவின் விலை 3,250 இருந்து 3,350 அமெரிக்க டொலர்களாகும், ஆனால் அடுத்த ஜூன் மாதம் வரை 3,400 இருந்து 3,500 அமெரிக்க டொலர்களாக உயர்வடைய கூடும், என்பதனால் இறக்குமதி தடைபட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்ட்டியுள்ளனர்.

இந்த சூழ்நிலையை தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமன்றி இறக்குமதியில் ஏற்படும் செலவீனங்களை மறைப்பதற்கு தாங்கள் 1 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடர் விலையை 100 ரூபாயினால் அதிகரிக்க வேண்டும் என நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும் தற்போது உள்ளூர் சந்தையில் காணப்படும் பால்மாக்களின் பங்குகள் அடுத்து 1 அல்லது 2 வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமைக்கு கடந்த நாட்களாக டொலருக்கு நிகரான இலங்கை பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor