கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

கிளிநொச்சி – பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியொன்று நேற்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது சீமந்துக் கொங்கிறீட் தென்பட்டுள்ளது. சந்தேகம் கொண்ட உரிமையாளர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கினார்.

அக்காணியில் நிலமட்டத்திலிருந்து சுமார் 35 அடி கீழ்நோக்கிச் செல்லும் குறித்த பதுங்கு குழி விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி என்பதனை அவ்விடத்திற்கு சென்ற இராணுவத்தினர் உறுதி செய்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor