முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாயமாகிறது

பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாய நடைமுறைக்கு வருகிறது.

இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்ட சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் அதற்கு சலுகைக்காலம் வழங்கப்பட்டு கடந்த 01ம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மேலும் இரண்டு வார காலம் சலுகை வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அந்த சலுகைக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது கட்டாய நடைமுறைக்கு வருகிறது.

Recommended For You

About the Author: Editor