அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுமா? புதிதாக உருவாகிய சர்ச்சை!

அன்னை பூபதியின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரின் பெயரை பயன்படுத்தி முன்னெடுக்கும் நிகழ்வுகளை தங்களது அனுமதியின்றி நடாத்தக்கூடாது என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி மட்டு. பொலிஸ் நிலையததில் நேற்று (திங்கட்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.

தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் பெயரைப் பயன்படுத்தி, சிலர் வெளிநாடுகளில் நிதிகளை திரட்டி மோசடிகளில் ஈடுபட்டுவருவதாகவும் சில அரசியல்வாதிகள் அரசியல் செய்துவருகின்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே அவரது பிள்ளைகளின் அனுமதியின்றி நினைவுத் தூபியில் நினைவு தினம் நடாத்தக்கூடாது என்பதுடன், நடாத்தப்பட்டுவரும் விளையாட்டுப் போட்டியை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

எதிர்வரும் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட இருக்கும் அன்னை பூபதியின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு “தேசத்தின் வேர்கள்” அமைப்பு மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தல் அன்னைபூபதி வெற்றிக்கிண்ணம் கால்பந்தாட்டவிளையாட்டுப் போட்டியை நடாத்திவருகின்றது.

அத்துடன் குறித்த நினைவு தினத்தில் மட்டு. நாவலடியில் அமைந்துள்ள பூபதியின் நினைவு தூபியில் நினைவு தின நிகழ்வு நடாத்த பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor