நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார்! – சம்பந்தன்

ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நினைப்பது அநாகரிகமான செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதனை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு எவருக்கும் உரிமை உண்டு என்கின்ற போதிலும், அவ்வாறான செயல் நாகரிகமற்றதென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறான செயல் இடம்பெறுவதில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒரு சாராரின் நலனை மாத்திரம் கருத்திற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் செயற்படுவதாகவும், அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாகவும் தெரிவித்து மஹிந்த ஆதரவு பொது எதிரணி சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி அடுத்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், அதற்குப் பின்னர் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளதாகவும், இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor