வலி. வடக்கில் அமைந்திருந்த இராணுவ களஞ்சியசாலை வெளியேற்றம்

வலி. வடக்கு – மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுதக் களஞ்சியசாலை அங்கிருந்து நேற்று (திங்கட்கிழமை) வெளியேற்றப்பட்டது.

குறித்த பகுதியில் கடந்த 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டமையை தொடர்ந்து இந்த ஆயுதக் களஞ்சியசாலை மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் என்பன இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டன.

அங்கு பொருத்தப்பட்ட இரும்புக் கூரையினை இராணுவத்தினர் கழற்றி வாகனங்களில் எடுத்துச்செல்கின்றனர். அத்துடன் ஆயுதக் களஞ்சியசாலையினை சுற்றிவர அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும் வெளியேற்றப்பட்டன.

மயிலிட்டி மக்களின் காணிகள் விடுவிக்கக்கூடாது எனவும் இராணுவத்தினரின் ஆயுதக் களஞ்சியம் அங்குள்ளது எனவும் தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தபோதும், மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor