தொகுதிவாரி தேர்தல் முறை தவறானது – சுமந்திரன்

தொகுதிவாரி தேர்தல் முறை மிகவும் மோசமானது என்பதற்கு வவுனியா நகரசபையின் ஆட்சியதிகாரம் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி வசமானமை மிகச் சிறந்த உதாரணம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த தேர்தல் முறையின் கீழ் நகரசபையில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சி ஆட்சி அமைக்கமுடியாத நிலையில் தோல்வியுற்று ஒருசில ஆசனங்களைக் கொண்ட கட்சிகள், ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

21 ஆசனங்களைக் கொண்ட வவுனியா நகரசபையில் அதிகப்படியாக 8 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆட்சியமைக்க முடியாது போயிருக்கின்ற நிலையில், மொத்தமாக 3 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி பொதுஜன பெரமுண மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகளுடன் கூட்டு அமைத்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது.

இது குறித்து கருத்து தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor