வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளிற்கான அவசர கலந்துரையாடல்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளிற்கான அவசர கலந்துரையாடல் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் யாழ்மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள YMC மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலானது பட்டதாரிகள் அனைவரினதும் வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதுடன் இம்மாதம் இடம்பெறவுள்ள நேர்முகத்தேர்வு தொடர்பாகவும் அதில் உள்ள பிரச்சினை தொடர்பாகவும் வேலையற்ற பட்டதாரிகளின் சரியான தரவுகளை உறுதிப்படுத்துதல் தொடர்பாகவும் நடைபெறும் முக்கிய கலந்துரையாடல் ஆகும்.

எனவே இந்த கலந்துரையாடலில் அனைத்து பட்டதாரிகளும் கலந்து கொள்வதுடன் சரியான முடிவுகளை எடுக்க ஒன்று சேர்ந்து செயற்படுவோம் என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது

Recommended For You

About the Author: Editor