சுமந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடம், பேருந்து தரிப்பிடம் என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளது!!

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பேருந்து தரிப்பிடம் என்பன கடந்த புதன்கிழமை(04) இரவு விஷமிகளால் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டில் கல்லூரி மாணவர்களின் சாதனைகளைப் பறைசாற்றும் புகைப்படங்களை உள்ளடக்கிப் பத்து இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பேருந்துத் தரிப்பிடம், கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் என்பனவே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor