சுதாகரனின் விடுதலைக்காக தலைநகரில் திரண்ட மக்கள்!

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி, தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டமும் கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது.

நேற்று (புதன்கிழமை) நவோதயா அமைப்பின் ஏற்பாட்டில் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால், இனம், மதம், மொழிகளை கடந்து திரண்ட மக்கள் ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு கோரிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்காக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையும் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: Editor