ஃபேஸ்புக் தடைக்கு சர்வதேசம் பாராட்டு!

இலங்கையில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமைக்கு சர்வதேச அமைப்புகள் பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் அண்மையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனங்களுக்கு இடையிலான மோதலை தொடர்ந்து, வெறுப்பூட்டும் பிரசாரங்களை தவிர்க்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தன.

கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், குறித்த தற்காலிக தடையானது ஊடக சுதந்திரத்தையோ அல்லது மக்களது அடிப்படை உரிமைகளையோ மீறும் செயற்பாடல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, அது சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் எடுக்க வேண்டிய முக்கியமான தீர்மானம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சாதாரண மற்றும் உயர்த்தரத்திற்கு தோற்றவிருந்த மாணவர்களும் ஃபேஸ்புக் தடை தீர்மானத்தை வரவேற்றிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor