முல்லைத்தீவில் இராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

உடையார்கட்டு குளத்தில் இருந்து இராணுவப் பண்ணைகளுக்கு பாரிய இயந்திரங்கள் மூலம் இராணுவத்தினர் நீர் இறைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உடையார்கட்டு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்று கூடிய மக்கள் பதாகைகளுடன் பரந்தன்-முல்லைத்தீவு வீதிவரை சென்று வீதியின் கரையாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து உடையார்கட்டுக் குளத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்திற்கும் சென்று தமது எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வட.மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் கலந்து கொண்டதுடன் 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகளும் பங்குபற்றியிருந்தனர்.

இராணுவத்தின் செயற்பாட்டால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பாக செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor