சுதாகரின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கையொப்பம் திரட்டும் பணிகள் கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.

இந்த கையெழுத்து திரட்டும் பணி வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

ஆனந்த சுதாகரின் மனைவி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கான கிரியைகளை செய்யும்பொருட்டு கடந்த 18ஆம் திகதி ஆனந்த சுதாகர் அவரது இல்லத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச்செல்லப்பட்டார்.

இந்நிலையில் அவரது மகன் தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, தாயை இழந்து நிற்கும் தமக்கு உதவுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஆனந்த சுதாகரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தெரிவித்து கையெழுத்து திரட்டும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பொதுமக்கள் பலர் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor