சமூக வலைத்தளத்தை தவறாகப் பயன்படுத்தினால் தண்டனை!

பேஸ்புக் அல்லது வேறேதும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில், குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், தண்டனை வழங்க முடியுமென, சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படிக் குற்றங்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரம், பொலிஸாருக்கு உண்டென, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டீ.சில்வா தெரிவித்தார்.

அத்துடன், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, குற்றப்புலனாய்வுப் பிரிவில், தனியானதொரு பிரிவு உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor