வடக்கில் ஒலிபெருக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்துமாறு முதல்வர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!!

வடக்கில் உள்ள மதஸ்தலங்களில் அதிக இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் இயக்கப்படுவதைக் கட்டுப்படுத்துமாறு வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பிரதானிகளுடன் வடக்கு முதலமைச்சர் நடத்திய சந்திப்பின் போது இந்த அறிவுறுத்தலை அவர் விடுத்துள்ளார்.

ஆலயங்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் இயக்கப்படுவதால் அவற்றின் சூழலில் வாழும் வயோதிபர்கள் நெஞ்சு அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், குற்றவியல் சட்டக்கோவையின் 98ஆம் பிரவின் கீழ் ஆலய நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் பொலிஸாருக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor