யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தியால் மக்கள் மகிழ்ச்சி

யாழ். போதனா வைத்தியசாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி நோயாளிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் (கிளினிக்) அமைக்கப்பட்டுள்ள குறித்த மின் உயர்த்தியை சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் திறந்து வைத்தமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வு யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

கடந்த 1977ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் வெளிநோயாளர் பிரிவில் மின் உயர்த்தி இல்லாமையானது பாரிய குறைபாடாக காணப்பட்டது. இதனால் மாடிப் படிகளில் ஏறிச் செல்ல நோயாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கியிருந்ததோடு குறிப்பாக சக்கர நாற்காலிகளில் வரும் நோயாளர்களை மாடிக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றும் வகையில் குறித்த மின் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor