யாழ். வங்கி பண மோசடி: கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணத்தில் அரசாங்க வங்கியொன்றுக்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி அநுராதபுரம் பிரதேச வங்கியொன்றில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றுக்கு கொண்டுச்செல்லப்பட்ட 11,074,000 ரூபாய் பணத்தில் 8,020,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

தேநீர் அருந்துவதற்காக இடையில் வாகனத்தை நிறுத்திய போதே குறித்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து, 56, 43, 24 மற்றும் 23 வயதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor