மாற்றுவழிகளில் பேஸ்புக் மற்றும் மற்றைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை !!

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும் தடை செய்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , இணையத்தின் ஊடாக பயன்படுத்தப்படும் பேஸ்புக் , வைபர் , இமோ மற்றும் வட்ஸ்எப் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , மாற்றுவழிகளை பயன்படுத்தி பேஸ்புக் மற்றும் மற்றைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.

அதேபோல் , இனவாத கருத்துகள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவோர் மற்றும் பரிமாற்றுவோர் தொடர்பிலும் அந்த ஆணையம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor