விபத்தில் வைத்தியர் ஒருவர் பலி

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ32 யாழ் – மன்னார் பிரதான வீதி, மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதியதன் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ் கரவெட்டி பகுதியை சேர்ந்த 41 வயதான வைத்தியர் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிய வருகிறது.

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor