பெண் பிரதிநிதிகளின் பெயர் பெயர்பட்டியலை ஒப்படைக்க கால அவகாசம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் பெண் பிரதிநிதிகளின் பெயர் அடங்கிய தமது பெயர்பட்டியலை, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

பெண் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“பெண்பிரதிநிதிகளின் பெயர் குறிப்பிடப்படாத பட்சத்தில் குறித்த கட்சி அல்லது சுயேட்சை குழுவின் பெயர் பட்டியலின்படி வர்த்தமானி அறிவித்தலில் பெண் வேட்பாளர்களுக்கான பதவி வெற்றிடமாகவே அறிவிக்கப்படும். உள்ளுராட்சிமன்றங்களுக்கான பெண் பிரதிநிதிகளின் பெயர் குறிப்பிடுவதில் கட்சிகள் தனது பொறுப்பற்ற தன்மையினை வெளிப்படுத்தி வருகின்றன. சட்ட உறுப்புரைகளில் சகல கட்சிகளிலும் 25 சதவீத பெண் பிரதிநிதிதுவம் கட்டாயப்படுத்த வேண்டுமென வழலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று சுயேட்சை குழுக்களும் இந்த 25 சதவீத பிரதிதிநிதுவத்துக்கு முக்கிய இடத்தினை கொடுக்க வேண்டும்.

பெருமளவிலான கட்சிகள் தனது கட்சிக்கான உறுப்பினர் பெயர்பட்டியலில் பெண் வேட்பாளர்களுக்கான எண்ணிக்கைக்கு பெண் உறுப்பினரை தெரிவு செய்வதற்கு பதிலாக ஆண் உறுப்பினரின் பெயரை பட்டியலில் இணைக்கூடிய வாய்ப்புக்களும் எழுந்துள்ளன. அவ்வாறு பெண் பிரதிநிதிகளின் பெயருக்கு பதிலாக ஆண் உறுப்பினர் ஒருவரின் பெயர் இணைக்கப்பட்டால் அவ் உறுப்பினர்கள் உள்ளுர்மன்றங்களில் சேவையாற்ற தகுதியற்றவர்களாகவே கருதப்படுவர்.

மேலும் பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக ஆண் பிரதிநிதிகளின் பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தால் தேர்தல் ஆணைக்குழு வெளியிடவுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறித்த பெண்பிரதிநிதிகளுக்கான பதவிகள் வெற்றிடமாகவே அறிக்கையிடப்படும். வர்த்தமானி அறிவித்தலை மீறி உள்ளூர் சபைகளில் குறித்த ஆண் பிரதிநிதிகள் பதவி வகிக்கமுடியாது” என கூறினார்.

Recommended For You

About the Author: Editor