விடுதலைப்புலிகளின் குண்டே வெடித்தது! : இராணுவ வீரரின் அதிர்ச்சித் தகவல்

தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி உட்பட்ட மேலதிக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுத்த திட்டத்தில் விளைவே பேரூந்து குண்டுவெடிப்பிற்கு காரணம் என கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கிய போதே இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், அன்றைய தினம் பேரூந்தில் வெடித்த கைகுண்டு 2015 காலப்பகுதிகளில் முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட விடுதலைப்புலிகளின் வாகனங்களில் இருந்து தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது தனக்கு கிடைத்த கைக்குண்டினை 2017ஆம் ஆண்டு மாத்தளையில் உள்ள தனது வீட்டில் கொண்டு சென்று மறைத்துவைத்ததாகவும், அதன்பின்னர் அதனை அண்மையில் கஹகொல்ல இராணுவ முகாமிற்கு கொண்டு சென்று, பேரூந்தில் இருந்து இறங்கும் தருணத்தில் வெடிக்கவைக்க திட்டமிட்டிருந்ததாகவும் குறித்த இராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்பாராத விதமாக பேரூந்தில் வைத்து அந்த கைக்குண்டு வெடித்துவிட்டதாகவும், கடன் தொல்லைக் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நோக்கிலேயே கைக்குண்டை கொண்டு வந்ததாகவும் குறித்த இராணுவ வீரர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor