வாள் வெட்டுக்கு இலக்கான யாழ் பல்கலைக்கழக மாணவன்!

யாழ். திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவனொருவன் வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்த இரு பெண்பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணுடன் முறைதவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்ததால், அப்பெண்ணின் கணவனே இவ்வாறு வெட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலும் தொடை மற்றும் பிட்டப் பகுதிகளில் வெட்டுக் காயங்களுக்குள்ளான மாணவன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவனது சொந்த இடமான முல்லைத்தீவுக்கு அனுப்பியுள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை மாணவனை வெட்டியவரின் வீட்டிலேயே குறித்த பல்கலைக்கழக மாணவன் மதிய நேர மற்றும் இரவு நேர உணவைப் பெற்று வந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர். சம்பவ தினத்தன்று மது போதையில் வந்த வீட்டுக்காரன் மாணவனை வெட்டியுள்ளார்.

அத்துடன் இக்குடும்பஸ்தரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரது உடம்பில் கடுமையான அடிகாயங்கள் காணப்படுவதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். பொலிஸார் மேற்படி சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor