யாழ். வைத்தியசாலைக்கு புதிய கட்டடம் : முதலமைச்சர் சி.வி. திறந்து வைப்பு

யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டடம் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு கட்டிடத் தொகுதியை திறந்துவைத்தார்.

மத்திய அரசின் மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட 27 மில்லியன் ரூபா நிதியில் வடமாகாண சுகாதார அமைச்சினால் இந்த கட்டடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், வடமாகாண சுகாதார அமைச்சர் க.குணசீலன், வடமாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி, வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன், யாழ்.மாவட்ட சுகாதார பணிமனைப் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமார் உட்பட குருநகர் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்.குருநகர் ஆதார வைத்தியசாலையில் நிலவிவந்த வெளிநோயாளர் பிரிவிற்கான குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வடமாகாண சுகாதார அமைச்சினால், இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

Recommended For You

About the Author: Editor