மயிலிட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய ஒரு பில்லியன் டொலர்

மயிலிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைகான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார்.

நோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ் காங்கேசன்துறை தெற்கு பளை வீமன்காமம் பகுதியில் சுமார் அறுபது லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தினை நோர்வே நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் நேற்று (20) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.

அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் சமூக செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த மண்டபத்தை நோர்வே அரசாங்கம் யு.என்.டி.பி ஊடாக நிர்மானித்து வழங்கியுள்ளது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றும் போதே, நோர்வே நாட்டின் பங்களிப்பில் மயிலிட்டி துறைமுக புனரமைப்புக்கு குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

வடகிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நோர்வே தொடர்ந்து அந்த திட்டங்களை முன்னெடுக்கும் என மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் இங்கு தெரிவித்ததுடன் மயிலிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்யும்பொருட்டு நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor