மாகாணசபைத் தேர்தல்கள் செப்டம்பர் மாதம் நடைபெறும்?

மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த முடியும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குருநாகலவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடவியலாளர்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, ஏதேனும் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்கள், பணம், பொருட்கள் அல்லது வேறேதும் பெறுமதியான பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor