பதவிக்கு வருமுன் STF பாதுகாப்பை கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை வேட்பாளர் ஒருவர் தான் பதவிக்கு வருவதற்கு முன்னே தனக்கான பாதுகாப்பை கோரியமை தொடர்பான விடயம் சக உறுப்பினர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாநகர சபை வேட்பாளராக களமிறங்கிய உறுப்பினர்களில் ஒருவர், தேர்தலில் போட்டியிட்டு தனது தொகுதியில் வெற்றியீட்டியுள்ளார்.

பின்னர் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே தமது கட்சித் தலைமையிடத்தில், தான் வென்றுவிட்டதாகவும் உடனடியாக தனக்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சங்கடத்துக்குள்ளான கட்சி தலைமை தற்போது இவை சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இருந்த போது குறித்த உறுப்பினருக்கு தற்போது கட்சித்தலைமைகளால் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தனது பாதுகாப்பை விரைவுபடுத்துமாறு கோரியுள்ளார். இந்த விடயத்தில் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் இவ்விடயம் ஏனைய சக உறுப்பினர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

ஏற்கனவே STF பாதுகாப்புடன் ஒரு சிலர் திரிவதனாலேயே மக்கள் மத்தியில் எதிர்ப்பு தோன்றியுள்ளதாகக்க கூறப்படும் நிலையில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor