மத்தியில் எமக்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதால் யாழ் மாநகரசபையில் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம்!

யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஈபிடிபி ஆதரவளித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதால், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதனை தெரிவித்தார். “இந்த விடயம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor