யாழ்ப்பாணம் வருகின்றார் இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா!

இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

மகா சிவராத்திரி தினமான நாளை 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழில் மாபெரும் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

“சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்வது அறிவியலே! ஆன்மீகமே! எனும் தொனிப்பொருளில் இந்த பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

கீரிமலை – நகுலேஸ்வரம் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தன்று மாலை 6.00 மணிக்கு இந்த பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

இந்த பட்டிமன்றத்தில் இந்தியாவின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களான திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் திரு. ராஜா ஆகியோருடன், யாழ்ப்பாணத்தில் உள்ள சிறந்த பேச்சாளார்களான, பேராசிரியர் தி. வேல்நம்பி, உட்பட தமிழருவி த.சிவகுமாரன், செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் மற்றும் பத்திரிகையின் ஆசிரியர் ந. விஜயசுந்தரம் ஆகியோர் பேசவுள்ளனர்.

இந்தியாவின் 69ஆவது குடியரசு தின நிகழ்வுகளின் தொடர் நிகழ்வாக இப்பட்டிமன்றம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor