மஹிந்தவின் வெற்றியால் கூட்டு அரசாங்கத்திற்கு பாதிப்பில்லை- சம்பந்தன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி, எந்தவகையிலும் கூட்டு அரசாங்கத்தை பாதிக்காது என எதிர்க்கட்சி தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் மாகாணசபை உருப்பினர்கள், பிரதேசசபை தேர்தலில் போட்டியிட்டவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor