ஈ.பி.டி.பியின் வேட்பாளர் மீது கூட்டமைப்பின் காடையர்கள் கொலைவெறித் தாக்குதல்!!!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச வேட்பாளர் மு.கிருஸ்ணபகவான் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காடையர் கூட்டம் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை வேளையில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிருஸ்ணபகவான் தனது இல்லத்தில் இருந்த சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தலைமையில் சென்ற குழுவினர் பொல்லுகளாலும் இரும்புக் கம்பிகளாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் படுகாயங்களுக்குள்ளான கிருஸ்ணபகவான் உடனடியாக ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே வேட்பாளரது மகனையும் குறித்த கூட்டமைப்பின் காடையர்கள் தாக்கியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor