மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக் கொலை

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன்(வயது 20) என தெரியவருகின்றது.

குறித்த இளைஞன் சுவிட்சர்லாந்தின் ECUBLENS VD பகுதியில் கடந்த 3 வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் கடந்த புதன் கிழமை இனம் தெரியாத நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் போது குறித்த கொலையுடன் தொடர்புபட்ட இலங்கையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுவிட்சர்லாந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor