மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி மரணம்!!

நாடு தேர்தல் அமளியில் காணப்படுகின்ற நிலையில் வன்னியில் விசுவமடுவில் முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வனின் மரணம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர், போராட்டத்தின்போது தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளிலும் கடும் காயத்திற்கு உள்ளாகியிருந்தார். விசுவமடுவில் வசித்து வந்த இவர் நேற்று 8ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டுக்காக போராட்டத்தில் இணைந்த சந்திரச்செல்வன் தனது உடல் அங்கங்களை இழந்து மிகுந்த வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த இவர் நேற்று மரணமடைந்திருப்பது அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor