யாழில் தனியார் ஊழியர்கள் சங்கம் உருவாக்கம்!! : அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் அழைப்பு!!

யாழ்ப்பாண மாவட்ட தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
ஆரம்ப நிகழ்வு வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நீதிமன்றத்துக்கு அண்மையிலுள்ள ஒமேகா இன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
“தனியார் துறை ஊழியர்களாகிய நாம் யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுகின்றோம். எனினும் எமக்குரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை.
எனவே எமது சிறுசிறு பிரச்சினைகளைத் தீர்க்க அமைப்பு ஒன்று அவசியமாகின்றது. அதற்காகவே தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது.
அமைப்பைத் தொடர்பான கலந்துரையாடல் வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் இடம்பெறுகிறது. அதில் தனியார் ஊழியர்கள் இருபாலரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor