இரட்ணஜீவன்  ஹுல் பத்திரிகை வெளியீடுகள் பக்கச்சார்பானவை -தமிழ்த்தேசிய பேரவை

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன்  ஹுல் வெளியிட்டதாக பத்திரிகை அறிக்கை ஒன்று மின்னஞ்சலில் கிடைத்துள்ளது .அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

17.01.2018 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் விஞ்ஞாபன வெளியீட்டின்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம்வகிக்கின்ற என்னைப் பற்றித்  தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி. மணிவண்ணன் ‘”நாங்கள் ஒன்றை இந்தத் தருணத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். எங்கள் மீது நீங்கள் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதிவரை நீங்கள் தாக்குதலை நடத்துங்கள். 11 ஆம் திகதி உங்கள் மீது தாக்குதல் தொடங்கப்படும். அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருங்கள். தயவாகவும் பொறுப்புடனும் இதனைக் கூறிக்கொள்கின்றோம். எங்களை வம்பிற்கு இழுத்தால் நாங்களும் சும்மா விடப்போவதில்லை” என்று பேசி உள்ளார். இந்த வைபவத்தில் அகில இலங்கைத் தமிழ் கொங்கிரசின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலமும் இணைந்துள்ளார்.

இவ்விடயமானது வலம்புரி, யாழ் தினக்குரல், உதயன் ஆகிய பத்திரிகைகளிலும் வேறும் பல இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப் பட்டுள்ளது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரசுடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் தமிழ் மக்கள் முன்னணியினால் இம்மிரட்டல் ஊடகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை இப்பத்திரிகைப் பிரசுரங்கள் சரியானவை என்பதையும் காட்டுகின்றன.

தேர்தல்வேளையில் அச்சுறுத்தல் வெளிவிடுவது மிகப்பாரதூரமானது என்று உள்ளூராட்சிச் சட்டம் காட்டுகின்றது. அச்சுறுத்தலால் கடமையைத் தடுக்கும் நோக்கத்துடன் தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவருக்கு எதிராகவே அச்சுறுத்தல் வெளியிட்டமையை பெரிய குற்றமாக கருதி  ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளதுடன் நானும்  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறையிட வேண்டி வந்தது.

இவ் விடயமானது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும் தருணத்தில் நான் அது தொடர்பில் விமர்சிப்பது பொருத்தமற்றது. ஆனால். நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படின் தண்டனை மிகப் பெரிதாய் அமையும்.

இந்தமுறை வேட்பாளரின் குணம், தகுதி பார்த்து மக்களை வாக்களிக்குமாறு ஆணைக்குழு வேண்டி நிற்கும் இத் தருணத்தில் வாக்காளர் சிந்திக்கவேண்டியது இது. சண்டித்தனம், காவாலித்தனம், ஆகியவற்றில் ஈடுபடுகின்றவர்களினதும், தேர்தல் விதிமுறை மீறல்களை ஆணைக்குழு தடுப்பது பக்கச்சார்பான செயல் என்று புனைபவர்களினதும், சட்டத்தரணிகளாய் இருந்தும் சட்டத்தை மீறுபவர்களினதும், பல வருடங்களாய்ப் பாராளுமன்றத்திற்கு செல்லாமல் பாராளுமன்ற முறைகள் அறியாது, சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழுவினர்களை அரசாங்கம் நியமிக்கின்றது என, தம் தவறுணராது பேசுகின்றவர்களினதும் கட்சி ஒன்று வாக்காளர்களிடம் அவர்களது வாக்கைக் கேட்டுப் போகிற நேரம் இது. இப்படியானவர்கள் தொடர்பில் வாக்காளர்களே சிந்தித்து விளிப்பாயிருப்பது அவசியம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை குறித்து விமர்சகர்கள் கண்டணங்களை முன்வைத்துள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தனிப்பட தொடர்ச்சியாக ஒரு கட்சிக்கு எதிராகவும் அதன் வேட்பாளர்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்யும் அறிக்கையினை எவ்வாறு அவர் வெளியிட முடியும் என்றும் இவை பக்கச்சார்பற்ற தேர்தல் ஆணைக்குழுவின் நடுவு நிலமையினை கேள்விக்குட்படுத்தும் செய்லாக இருக்கும் என்றும் ஒரு கட்சிக்கு மக்கள் வாக்களிக்கக்கூடாது என்பதை தேர்தல் ஆணையகமே பிரச்சாரம் செய்வது போன்று தோற்றமளிப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து தேர்தல் ஆணையாளருக்கு தாம் முறைப்பாடு செய்ய உள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமிழ்த்தேசிய பேரவையும் தெரிவித்துள்ளன.

இது தொடர்பிலான முன்னைய செய்தி

??????? ????????? ??????? ????????????????- ?????????? ????????? ?????????????!

 

Recommended For You

About the Author: webadmin