மண்டைதீவுக் கடலில் வெடிபொருள்களுடன் மிதந்து வந்த பெட்டி மீட்பு!!

யாழ்ப்பாணம், மண்டைதீவுக் கடலில் மிதந்துவந்த மரப் பெட்டியொன்றிலிருந்து 4 கண்ணிவெடிகள் உள்பட வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மண்டைதீவு கடலில் நேற்று மாலை 5 மணியளவில் பச்சை நிற மரத்தாலான பெட்டியொன்று மிதந்து வருவதை மீனவர்கள் சிலர் அவதானித்துள்ளனர். அதனையடுத்து அந்த சந்தேகத்திற்கு இடமான பெட்டி தொடர்பில் மண்டைதீவு பொலிஸ் காவலரனுக்கு மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டது. அப் பெட்டியை ஊர்காவற்றுறை பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பெட்டிக்குள் 4 கண்ணிவெடிகள் உள்பட வெடிபொருள்கள் அடைக்கப்பட்டிருந்தன. மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்றின் அனுமதியுடன் அவை செயலிழகச் செய்யப்படும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor