மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல பொலிஸ் நற்சான்றிதழ் அவசியம்!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய், சாஜா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் நாட்டின் பொலிஸ் நற்சான்றிதழ் ஒன்றைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இச்சட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அறிவித்துள்ளது.

எனினும் இச்சட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிவிலக்கு எனவும் அச்சட்டம் குறிப்பிட்டுள்ளது.

தமது நாட்டுக்குள் வருபவர்கள் தாய் நாட்டில் குற்றமற்றவராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor