யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக முக்கிய உத்தரவு!

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக யாழ்.மாநகர சபைக்கு, மல்லாகம் நீதிமன்றமானது மூன்று முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

நேற்றயதினம் (வெள்ளிக்கிழமை) மல்லாகம் நீதிமன்றில் குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் குறித்த உத்தரவிரனை பிறப்பித்தார்.

இதன்படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் குப்பைமேட்டினை சுற்றி வேலி அமைக்க வேண்டும் எனவும், இவ் குப்பை மேட்டில் மலக்கழிவானது கொட்டுவதற்கு தடை விதித்தும், குப்பை கழிவுகளை எரிப்பதற்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு கொட்டப்படும் பிளாஸ்ரிக் கழிவானது உரிய முறையில் முகாமைத்தும் செய்யப்பட வேண்டும் எனவும், கழிவு நீரானது உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor