ஐ.நா.வில் இலங்கை மீது அதிருப்தி வெளியிடவுள்ள ஹுசைன்?

ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரின்போது தாமதமாகிவரும் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா. சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இதன்போது, இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை தாமதமடைந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் ஆணையாளர் இதன்போது தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹூசைனின் இலங்கை குறித்த அறிக்கையை தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளது. இதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் முன்வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதிலுள்ள சவால்கள் குறித்தும் இலங்கை ஐ.நா.வை தெளிவுபடுத்தவுள்ளது.

Recommended For You

About the Author: Editor